Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Jun 2, 2012

நாஞ்சில் நாடன் .....

நாஞ்சில் நாடன், நான் அவரின் மிக சில கதைகளை மட்டுமே படிதிருந்தபோதிலும் அவர் எழுத்தின் தாக்கம் என்னில் இன்னும் மிச்சமிருப்பதாலேயே இந்த பதிவு.

இப்பொழுதெல்லாம் நான் வேறு எழுத்தாளர்களை படிக்கையில் இவரின் சொல்லாற்றலும், அந்த எள்ளலும், நடையும் நினைவுக்கு வரும்.

அவரின் படைப்புகள் உண்மைக்ளை அப்பட்டமாய் முகத்தில் அரைபவை. மிக இயல்பான எங்கேயும் பார்க்கும் கேட்கும் சம்பவங்களை கொண்டவை. பல நேரங்களில் அவரின் வட்டார மொழி பரவசத்தையும், கிளர்ச்சியையும்; அதர்க்கு நேர்மாறான அருவெருப்பையும் எனக்கு ஏற்படுத்தியது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அந்த அருவெருப்பு ஒருசில வார்த்தை மொழியால் மட்டுமல்ல; அவர் கூறும் பச்சையான் உண்மைகளை மனம் ஏற்காத்ததினால்தான்.. !

இலக்கியம் என்பது இது போன்ற மனிதாபிமானம் சொல்லும், நம்மை பிரதிபலிக்கும் இது போன்ற எழுத்துக்கள்தாம் என்பது என் கருத்து.

நான் இதுவரை இரசித்த நாஞ்சி நாடன் அவர்களின் கதைகள் சில..

கான் சாகிப் (சிறுகதை)
தேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம் (சிறுகதை)
தீதும் நன்றும் (கட்டுரைகள், விகடன் வெளியீடு)

தலைகீழ் விகிதங்கள் (நாவல்)
மிதவை (நாவல்)

மேலும் அவரைப்பற்றி அறிய...  நாஞ்சில் நாடன் வலைப்பூ



Jan 24, 2011

அம்மாவுக்கு…

நீ நிலாச்சோறு ஊட்டிய நினைவுகளில்லை,

       உன் நெஞ்சில் என் நித்திரையும் நினைவில்லை..

நின் மடி தூக்கமது நினைவில்லை,

       உன் இடுப்புச் சவாரியும் நினைவில்லை..

அழும்போது ஆற்றுவாயே அது நினைவில்லை,

       அடித்தபின் அணைப்பாயே அதுவும் நினைவில்லை..

எல்லாம் எல்லாம் நினைக்கும்போது

        மீண்டும் ஒருமுறை குழந்தையாகி,

நிந்தன் மடியில் இடமும் வாங்கி

        நினைவுகளை சேமிக்க நினைக்கின்றேன்…!

Aug 14, 2010

Six Suspects - மோட்டிவ் 6

சிக்ஸ் சஸ்பெக்ட்ஸ் என்ற பெயரில் வெளிவந்த விகாஸ் ஸ்வரூபின்  ஆங்கில நாவல்தான் மோட்டிவ்-6 என்கிற பெயரில் ஜூனியர் விகடனில் தொடராக வெளிவருகிறது.

அவரின் முந்தய Q & A நாவல்தான் ஸ்லம்டாக் மில்லினியர் படமாக வெளிவந்து ஆஸ்கர் வென்றது, நம்ம ஏ.ஆர்.ரஹ்மானும் அந்த படத்திற்காகதான் இரட்டை ஆஸ்கர் வென்றார்.

சிக்ஸ் சஸ்பெக்ட்ஸ்கூட விரைவில் படமாக உள்ளதாம்.

Jul 16, 2010

யுவன் - தில்லாலங்கடி

யுவன் ஷங்கர் ராஜாவின் "தில்லாலங்கடி" பட பாடல்களில் புதிய குரல்களை பயன்படுதியுள்ளார்...

இதயம் கரைகிறதே.. உயிரை தீண்டும் சிரிப்பாலே..

பாடலில் உண்மையில் மனம் கரைகிறது..
ஆனால் பாடல் 2.10 நிமிடங்கள் மட்டுமே என்பதுதான் சின்ன வருத்தம்..

பாடல் வரிகள் இதோ...

இதயம் கரைகிறதே.. உயிரை தீண்டும் சிரிப்பாலே..
உலகில் இதுபோலே... இன்பம் எதுவும் கிடையாதே..
மலரொன்று எதிரிலே பேசுதே...
கடவுளின் தரிசனம் காட்டுதே..
ஒரு சொல் ஒரு பார்வை.. உயிரில் ஏதோ நடக்கிறதே...
புதையல் கண்ட ஏழை போலே இதயம் குதிக்கிறதே..

Feb 28, 2010

Test from Live Writer

இது ஒரு முன்னோட்டம்தான்.. இனியாவது நிறைய் எழுதுவேனா?