நாஞ்சில் நாடன், நான் அவரின் மிக சில கதைகளை மட்டுமே படிதிருந்தபோதிலும் அவர் எழுத்தின் தாக்கம் என்னில் இன்னும் மிச்சமிருப்பதாலேயே இந்த பதிவு.
இப்பொழுதெல்லாம் நான் வேறு எழுத்தாளர்களை படிக்கையில் இவரின் சொல்லாற்றலும், அந்த எள்ளலும், நடையும் நினைவுக்கு வரும்.
அவரின் படைப்புகள் உண்மைக்ளை அப்பட்டமாய் முகத்தில் அரைபவை. மிக இயல்பான எங்கேயும் பார்க்கும் கேட்கும் சம்பவங்களை கொண்டவை. பல நேரங்களில் அவரின் வட்டார மொழி பரவசத்தையும், கிளர்ச்சியையும்; அதர்க்கு நேர்மாறான அருவெருப்பையும் எனக்கு ஏற்படுத்தியது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அந்த அருவெருப்பு ஒருசில வார்த்தை மொழியால் மட்டுமல்ல; அவர் கூறும் பச்சையான் உண்மைகளை மனம் ஏற்காத்ததினால்தான்.. !
இலக்கியம் என்பது இது போன்ற மனிதாபிமானம் சொல்லும், நம்மை பிரதிபலிக்கும் இது போன்ற எழுத்துக்கள்தாம் என்பது என் கருத்து.
நான் இதுவரை இரசித்த நாஞ்சி நாடன் அவர்களின் கதைகள் சில..
கான் சாகிப் (சிறுகதை)
தேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம் (சிறுகதை)
தீதும் நன்றும் (கட்டுரைகள், விகடன் வெளியீடு)
தலைகீழ் விகிதங்கள் (நாவல்)
மிதவை (நாவல்)
மேலும் அவரைப்பற்றி அறிய... நாஞ்சில் நாடன் வலைப்பூ
No comments:
Post a Comment